ஜீ தமிழ் வெளியிடும் புதிய திரைப்படம்!

தற்பொழுது தமிழில் மட்டும் பல தொலைக்காட்சிகள் வந்துவிட்டன ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் பலத்த போட்டிகள் இருக்கும் இந்த நிலையில் தமிழில் சன் தொலைக்காட்சி தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சிகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள் அதில் ஒன்று ஜீ தமிழ் இந்த தொலைக்காட்சி சன் தொலைக்காட்சிக்கு எதிராக பல புதிய படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் புதிது புதிதாக திரைப்படத்தை வெளியிட்டு வரும் இவர்கள் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது டிஆர்பியை ஏற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆர்ஜே பாலாஜி நடித்து ஹிட்டான எல்கேஜி திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.